/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் கால்நடைகள் வீறுநடை: விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
சாலையில் கால்நடைகள் வீறுநடை: விபத்தில் சிக்கும் வாகனங்கள்
சாலையில் கால்நடைகள் வீறுநடை: விபத்தில் சிக்கும் வாகனங்கள்
சாலையில் கால்நடைகள் வீறுநடை: விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : நவ 04, 2025 08:47 PM

பந்தலுார்: பந்தலுார் பஜாரில் கால்நடைகள் தொல்லையால், வாகன ஓட்டுனர்கள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தாலுகா தலைநகரான பந்தலுார் பஜாரை ஒட்டி, அரசு தலைமை மருத்துவமனை, கோர்ட், நகராட்சி அலுவலகம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார மக்கள் அத்தியாவசிய தேவைக்கு இங்கு வந்து செல்கின்றனர்.
கேரளா மாநிலத்திலிருந்து நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணியர் இந்த வழியாக வந்து செல்லும் நிலையில் கால்நடை வளர்ப்போர்கள் கால்ந டைகளை, பஜார் பகுதியில் விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். கால்நடைகள் பகல் நேரங்களில் சாலைகளில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம், கால்நடைகளைப் பிடித்து பெயரளவுக்கு அபராதம் விதித்து மீண்டும், கால்நடைகளை ஒப்படைப்பதால் கால்நடை வளர்ப்பவர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
கால்நடை உரிமையாளர்கள் மீது நகராட்சி நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தப் பட்டுள்ளது.

