/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
/
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்
ADDED : ஜன 08, 2026 05:27 AM

கூடலுார்: கூடலுார் நந்தட்டி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக, கோழிக்கோடு சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் பாதிப்பு ஏற்படுகிறது.
கூடலுார், நந்தட்டி பகுதியில் கோழிக்கோடு சாலையோரம் வாகனங்கள் பழுது பார்க்கும், தனியார் பணிமனைகள் பல செயல்பட்டு வருகிறது. இப்பகுதி சாலையோரத்தை பயன்படுத்த முடியாத பழைய வாகனங்கள், பைனான்ஸ் பிரச்னைகளால் எடுத்து வரப்படும் வாகனங்கள் நிறுத்தவும், பழைய இரும்பு பொருட்கள் வைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும், பழுது நீக்க பணிக்கு வரும் வாகனங்கள், போக்குவரத்துக் இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தி பணிகளை மேற்கொள்கின்றனர். அப்பகுதி சாலையோரம் எப்போதும் வாகனம் நெரிசல் நிறைந்து காணப்படுகிறது. மக்கள் சாலையோரம் நடந்து செல்ல இடவசதி இன்றி சாலையில் நடந்து செல்கின்றனர்.
மேலும், சில வாகன ஓட்டுனர்கள், திடீரென வாகனங்களை சாலையில் பின்னோக்கி இயக்குகின்றனர். இதனால், அப்பகுதியில் வாகன விபத்துக்கள் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'வாகன விபத்துகளை தடுக்க, அப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படும் வாகன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், போக்குவரத்து சீரமைக்கும் வகையில், விதிமீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
அங்குள்ள பழைய வாகனங்களை உடனடியாக அகற்றி அப்பகுதிகளை சுத்தம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், அப்பகுதியில் விஷ ஜந்துக்களால் ஏற்படும் பாதிப்பு தவிர்க்கப்படும்,' என்றனர்.

