/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
/
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு
ADDED : பிப் 20, 2025 10:11 PM
குன்னுார்; குன்னுார் ஓட்டுப்பட்டறை குறுகிய சாலையோரத்தில் அடிக்கடி நிறுத்தும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
குன்னுார் ஓட்டுப்பட்டறை குறுகிய சாலை வழியாக, ஸ்டான்லி பார்க், கரடிபள்ளம், உபதலை, வசம்பள்ளம உட்பட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. சாலையோரங்களில் கார்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை அடிக்கடி நிறுத்தப்படுகின்றன.
இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பணிகளுக்கு செல்வோரும், பள்ளி கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியரும், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
மேலும், இந்த சாலையில் மினி பஸ்கள் அதிவேகமாக இயக்கப்படுவதாலும் பாதிப்பு ஏற்படுகிறது. இதுகுறித்து, பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும்,நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே, நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இப்பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.