/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நேரத்துக்கு இயங்காத 'விடியல்' பஸ்கள்; 'எக்ஸ்பிரஸ்' கட்டணத்தில் மகளிர் பயணம்

ADDED : ஜன 07, 2025 01:56 AM
குன்னுார்; ஊட்டி- குன்னுார் இடையே மகளிர் விடியல் பயணம் பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படாததால், 'எக்ஸ்பிரஸ்' பஸ்களில் மகளிர் பயணம் செய்து வருகின்றனர்.
'குன்னுார்- ஊட்டி இடையே, 10 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படும்,' என, போக்குவரத்து கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், சமீப காலமாக அடிக்கடி, 2 மணி நேரத்திற்கு, ஒரு முறை மட்டுமே பஸ்கள் இயக்கப்படுகிறது.
மகளிருக்கு விடியல் பயணம் துவக்கப்பட்ட போது இயக்கப்பட்ட அரசு பஸ்கள் தற்போது குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக, மதியம், 2:00 மணிக்கு குன்னுாரில் இருந்து ஊட்டி செல்லும் சேலம் அரசு பஸ்சில் மகளிர் பணம் கொடுத்து செல்கின்றனர்.
ஊட்டியில் இருந்து மாலை, 3:00 மணியில் இருந்து 5:30 மணி வரையிலான இடைபட்ட நேரத்தில் இரு பஸ்கள் இயக்கினாலும், மகளிர் கட்டணம் செலுத்தி பயணிக்கின்றனர்.
காலை, 8:00 மணியில் இருந்து 9:30 மணி வரை குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு குறைவான பஸ்கள் இயக்குவதால், மகளிர் உட்பட பயணிகள் 'எக்ஸ்பிரஸ்' பெயரில் இயங்கும் பஸ்களில் கூட்ட நெரிசலில் பயணம் செய்கின்றனர். எனவே, குறிப்பிட்ட நேரங்களில் மகளிர் 'விடியல்' பயண அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.