/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
கிராம உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : பிப் 06, 2025 08:34 PM

குன்னுார்; வருவாய் கிராம ஊழியர் சங்க, நீலகிரி மாவட்ட கிளை சார்பில், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, குன்னுாரில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
குன்னுார் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நடந்த இந்த போராட்டத்திற்கு, சங்க மாவட்ட தலைவர் சகாய நாதன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் அப்துல் மஜீத், மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்து துவக்கி வைத்தனர். 'வருவாய் துறை உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,' என்பன, உட்பட 5 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
உதவியாளர்கள் இறந்தால், அவரின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில், வாரிசு வேலை வழங்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உத்தரவால் பலர், 23 ஆண்டு காலம் பயன் பெற்ற வந்ததை அறிவிப்பு நிறுத்தம் செய்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது, சங்க நிர்வாகி ஸ்ரீஜித் நன்றி கூறினார்.
* ஊட்டியில் ஆர்.டி.ஓ.,அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் பிரபு தலைமை வகித்தார். துணை தலைவர் கலையரசன், ஊட்டி வட்ட தலைவர் ராகுல், குந்தா வட்டத் தலைவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில், 'வருவாய் கிராம ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட மாநில அரசு முன்வர வேண்டும்,' என, கோரிக்கை விடுக்கப்பட்டது.

