/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத கிராமம்: கலெக்டரிடம் மனு அடிப்படை வசதியை நிறைவேற்ற கோரி கலெக்டரிடம் மனு
/
50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத கிராமம்: கலெக்டரிடம் மனு அடிப்படை வசதியை நிறைவேற்ற கோரி கலெக்டரிடம் மனு
50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத கிராமம்: கலெக்டரிடம் மனு அடிப்படை வசதியை நிறைவேற்ற கோரி கலெக்டரிடம் மனு
50 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாத கிராமம்: கலெக்டரிடம் மனு அடிப்படை வசதியை நிறைவேற்ற கோரி கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 11, 2025 08:39 PM
ஊட்டி; கோத்தகிரி அருகே, அம்பாள் பகுதி மக்களுக்கு உடனடியாக சாலை அமைக்க வலியுறுத்தி, கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடந்தது. அதில், கீழ் கோத்தகிரி கெங்கரை அருகே உள்ள அம்பாள் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:
அம்பாள் காலனியில், 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த, 50 வருடங்களாக வசித்து வருகிறோம். படிப்பு, வேலை விஷயமாக நாள்தோறும் வெளியூறுக்கு சென்றுவர வேண்டி உள்ளது. கிராமத்திற்கு தேவையான நடை பாதை, தடுப்பு சுவர் உள்ளிட்ட வசதிகள் எல்லாம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எங்கள் கிராமத்திற்கு இதுவரை சாலை வசதி இல்லை.
இந்நிலையில், கடந்த, 2 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் பயனில்லை. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில், சாலை வசதி இல்லாததால் மிகவும் சிரமப்படுகிறோம்.
அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியவில்லை. இதனால் உடல்நிலை பாதிப்படைந்தவர்களை தொட்டில் கட்டி துாக்கி செல்கிறோம். இது போன்ற காரணங்கள் சில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோக்கால் ஊர் பொதுமக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கொடுத்த மனு:
சோலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட கோக்கால் பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவை சேர்ந்த, 300 குழந்தைகள் படிக்கின்றனர். பள்ளிக்கு சொந்தமாக, 1.5 ஏக்கர் இடம் உள்ளது. அதில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு குறித்து, தாசில்தார், வி.ஏ.ஓ., ஆகியோரிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஆய்வு செய்து அதனை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.