/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மர குச்சிகள் உதவியுடன் பொருத்தப்பட்ட தெருவிளக்கு அதிருப்தியில் கிராம மக்கள்

ADDED : பிப் 12, 2024 08:44 PM

பந்தலுார்:நெல்லியாளம் நகராட்சியில் தொண்டியாளம் பகுதியில் மரக்குச்சி உதவியுடன் தெரு விளக்கு பொருத்தப்பட்டுள்ளதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நெல்லியாளம் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் வன விலங்குகளின் தொல்லை சமீப காலமாக அதிகரித்து காணப்படுகிறது.
வார்டு பகுதிகளில் போதிய தெரு விளக்கு வசதி இல்லாத நிலையில், வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்து தெரிந்து கொள்ள முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனைத்து வார்டுகளிலும் குடியிருப்புகள், நிறைந்த பகுதிகளில் தெருவிளக்குகள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில், பந்தலுார் அருகே தொண்டியாளம் என்ற இடத்தில், தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், மரக்குச்சிகள் உதவியுடன் பொருத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பலத்த காற்று வீசினாலோ அல்லது மரக்குச்சிகள் பலம் இழந்தாலோ, தெரு விளக்குகள் விழுந்து விடும் நிலையில் உள்ளது. மக்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு பின் பொருத்தப்படும் தெரு விளக்குகள், தரமான முறையில் பொருத்த வேண்டும், மரக்குச்சிகளை அகற்ற வேண்டும்,' என்றனர்.