/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாசு கலந்த தண்ணீரை குடிக்கும் கிராம மக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு நோய் அபாயம்
/
மாசு கலந்த தண்ணீரை குடிக்கும் கிராம மக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு நோய் அபாயம்
மாசு கலந்த தண்ணீரை குடிக்கும் கிராம மக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு நோய் அபாயம்
மாசு கலந்த தண்ணீரை குடிக்கும் கிராம மக்கள்; தோட்ட தொழிலாளர்களுக்கு நோய் அபாயம்
UPDATED : ஆக 15, 2025 08:44 PM
ADDED : ஆக 15, 2025 08:38 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே புது காரைக்கொல்லி பகுதியில் குடிநீர் இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பந்தலுார் அருகே புது காரைக்கொல்லி பகுதியில், டான்டீயில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அரசு தொகுப்பு வீடு கட்டி வழங்கப்பட்டது.
இந்த பகுதியில் தற்போது, 45 குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய அமைக்கப்பட்ட, கிணற்றில் மின் இணைப்பு வழங்காததால், தண்ணீர் வினியோகம் செய்ய முடியாத நிலை தொடர்கிறது.
தற்போது, பழைய கிணற்றிலிருந்து குடிநீர் வினியோகம் செய்யும் நிலையில், தண்ணீர் மண் கலந்து, மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. இந்த தண்ணீரைக் கொண்டு சமையல் செய்யவும், குடிக்கவும் முடியாமல், பிற தேவைகளுக்கும் பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
தற்காலிகமாக, தனியார் ஒருவரின் கிணற்றிலிருந்து தலைசுமையாக, தண்ணீரை சுமந்து வந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
கூலி வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வரும் தொழிலாளர்கள், யானை மற்றும் சிறுத்தை அச்சத்துடன் இரவிலும் தண்ணீர் சுமக்கும் நிலையில் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக, கிராம மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.