/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்
/
சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்
சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்
சேதமான நடைபாதையில் தடுமாறும் பாதிரிமூலா கிராம மக்கள்
ADDED : ஜன 05, 2026 05:54 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே பாதிரிமூலா பழங்குடியின கிராமத்தில் சேதமடைந்த நடைபாதையில் மக்கள் தடுமாறி விழும் நிலை தொடர்கிறது.
பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, பகுதியில் பாதிரிமூலா கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள தாழ்வான பகுதியில், பழங்குடியின கிராமத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கு செல்ல, ஊராட்சி மூலம் அமைக்கப்பட்ட நடைபாதை, உடைந்து கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது.
பகல் நேரங்களில் இந்த நடைபாதையில் செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தடுமாறி விழும் நிலையில், இரவில் நடந்து செல்லும் போது தினசரி விழுந்து காயம் ஏற்படுவது தொடர்கிறது.
இதுகுறித்து கிராம மக்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகின்றனர்.
எனவே, நடைபாதை முழுவதுமாக பெயர்ந்து, மக்கள் பாதிக்கப்படும் முன்னர் நடைபாதையை சீரமைத்து தர வேண்டும்.

