/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அதிக லோடு ஏற்றி வந்த லாரியால் சாலை சேதம் கிராம மக்கள் அதிருப்தி
/
அதிக லோடு ஏற்றி வந்த லாரியால் சாலை சேதம் கிராம மக்கள் அதிருப்தி
அதிக லோடு ஏற்றி வந்த லாரியால் சாலை சேதம் கிராம மக்கள் அதிருப்தி
அதிக லோடு ஏற்றி வந்த லாரியால் சாலை சேதம் கிராம மக்கள் அதிருப்தி
ADDED : மே 14, 2025 10:49 PM
ஊட்டி,; கூடலுார் ஊராட்சி ஒன்றியம், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, குந்தலாடி பகவதி கோவில் அருகில் இருந்து, தானிமூலா செல்லும் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதம மந்திரி கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3-.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது.
இந்த சாலையில் நேற்று முன்தினம் வேறு பகுதியில், சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் ஒருவர், தனது பணிக்கு தேவையான லோடு லாரியை தானிமூலா சாலை வழியாக கொண்டு சென்று உள்ளார். கூடுதல் பாரம் ஏற்றிய லாரி மேடுபாங்கான சாலையில் செல்ல முடியாமல் நிலை தடுமாறியதில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு புகார் அனுப்பினர். தொடர்ந்து,நேற்று காலை சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. 'ஐந்து ஆண்டுகளுக்கு இந்த சாலையில் ஏற்படும் சேதம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மூலமாக சீரமைக்கப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையில் சேதம் ஏற்பட காரணமான லாரி டிரைவர் மீது, நெலாக்கோட்டை போலீசில், ஒப்பந்ததாரர் புகார் அளித்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.