பயன்படுத்த முடியாத நிழல்குடை கிராம மக்கள் அதிருப்தி
பயன்படுத்த முடியாத நிழல்குடை கிராம மக்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 02, 2026 03:23 AM

அ நிறம் | அளவு
கூடலுார்: தமிழக கேரளா எல்லையான, கீழ்நாடுகாணியில் அமைக்கப்பட்ட நிழல்குடையை, கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வந்தனர்.
சேதமடைந்த நிழல் குடையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால், மக்கள் அச்சத்துடன் அதனை பயன்படுத்தி வந்தனர். பருவமழை துவங்கியுள்ள நிலையில் நிழல்குடை வசதியின்றி, மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மக்கள் கூறுகையில்,'பல ஆண்டுகளாக சேதமடைந்து வரும் நிழல்குடை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால், தற்போது பயன்படுத்த முடியாத வகையில் நிழல் குடை சேதமடைந்துள்ளது.
அதிகாரிகள் ஆய்வு செய்து, புதிய நிழல் குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
