sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

/

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்

விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்கள் பரவசம்


ADDED : நவ 17, 2024 10:16 PM

Google News

ADDED : நவ 17, 2024 10:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; மசினகுடி, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.

மசினகுடி ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் விழா, 15ம் தேதி துவங்கியது. தீர்த்த மற்றும் முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 8:45 மணிக்கு விநாயகர் பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யம் பூஜை, ஸ்ரீமகாகணபதி ஹோமம், தீபாராதனை, விநாயகருக்கு அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக வேள்வி, மகா பூர்ணாஹிதி, தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.

நேற்று காலை, 6:45 மணிக்கு மங்கள இசையுடன் பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள், கலசங்கள் ஆலயத்தை சுற்றி வரும் நிகழ்ச்சியுடன், 10:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், அபிஷேக பூஜைகள் நடந்தது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us