/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காத்தாடிமட்டம் பஸ் ஸ்டாப்பில் விதிமீறல்; போலீசார் ஆய்வு நடத்துவது அவசியம்

ADDED : செப் 23, 2024 10:37 PM

ஊட்டி : மஞ்சூர் காத்தாடி மட்டம் பஸ் ஸ்டாப் பகுதியில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மஞ்சூர் - ஊட்டி சாலையில் காத்தாடிமட்டம் சந்திப்பிலிருந்து, ஊட்டி, மஞ்சூர், எடக்காடு வழித்தடத்தில் ஏராளமான கிராமங்கள் உள்ளன. அரசு பஸ் மற்றும் தனியார்வாகனங்கள் இச்சாலையில் அதிகளவில் சென்று வருகின்றன. சமீபத்தில் குறுகலாக இருந்த இச்சாலையை நெடுஞ்சாலைத் துறையினர் அகலப்படுத்தினர். சாலையை அகலப்படுத்திய பின், இருப்புறமும் வாகனங்கள் நிறுத்தப்படுவது அதிகரித்துள்ளது.
விபத்து அபாயத்தை கருத்தில் கொண்ட போலீசார் 'டிவைடர்' அமைத்து, 'குறிப்பிட்ட வாகனங்கள் மட்டும் நிறுத்தவேண்டும்,' என, அறிவுறுத்தியுள்ளனர்.வாகனஓட்டிகள் டிவைடரை தள்ளி வைத்து தாறுமாறாக வாகனங்களை நிறுத்திவருகின்றனர்.
உள்ளூர் மக்கள் கூறுகையில், போலீசார் ஆய்வு நடத்தி, அப்பகுதியில் இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும்,' என்றனர்.