/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மூட்டைகள் மீது அமர்ந்து செல்லும் தொழிலாளர்கள்: கண்டு கொள்ளாத போலீசாரால் விதிமீறல்

ADDED : மார் 12, 2024 11:28 PM

ஊட்டி:சரக்கு லாரிகளில் அளவுக்கு அதிகமாக கேரட் மூட்டைகளை ஏற்றி, அதன் மேல் தொழிலாளர்களை அமர வைத்து செல்வது, ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து உள்ளது.
போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தால் நடத்தப்படுகின்றன. சாலைகளில் விதிகளை மீறி வாகனங்கள் இயக்கப்பட்டால் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைள் குறித்து போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். எனினும், சில இடங்களில் விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, ஊட்டி சுற்று வட்டார பகுதிகளான எம்.பாலாடா, இத்தலார், காத்தாடி மட்டம், கேத்தி பாலாடா உள்ளிட்ட சாலைகளில் லாரிகளில் அளவுக்கு அதிகமாக கேரட் மூட்டைகளை ஏற்றி கொண்டு, அதன் மேல் தொழிலாளர்களை அமர வைத்து அதிவேகத்தில் லாரிகள் செல்கின்றன.
'இதுபோன்ற விதிமீறல் செயலில் எக்காரணத்தைக் கொண்டு ஈடுபடக் கூடாது,' என, போலீசார் அறிவுறுத்தியும், லாரி டிரைவர்கள் ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
முன்தோர மக்கள் கூறுகையில், ' பல்வேறு இடங்களில் இருந்து கேரட் பணிக்கு வரும் தொழிலாளர்கள் லாரிகளில் எவ்வித பாதுகாப்பும் இன்றி அமர்ந்து செல்கின்றனர்.
அதில் பெண்கள் அதிகம். இத்தகைய விபத்து அபாயத்தை தடுக்க போலீசார் வாகன சோதனை மேற்கொண்டு அதிகபட்ச அபராதம் விதிக்க வேண்டும்,' என்றனர்.