/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிக்- - அப் வாகனத்தில் விதிமீறல்; ஸ்கூட்டிக்கு அபராதம் விதிப்பு
/
பிக்- - அப் வாகனத்தில் விதிமீறல்; ஸ்கூட்டிக்கு அபராதம் விதிப்பு
பிக்- - அப் வாகனத்தில் விதிமீறல்; ஸ்கூட்டிக்கு அபராதம் விதிப்பு
பிக்- - அப் வாகனத்தில் விதிமீறல்; ஸ்கூட்டிக்கு அபராதம் விதிப்பு
ADDED : ஏப் 17, 2025 09:06 PM
குன்னுார்; சோலுார் மட்டத்தில் ஆட்களை ஏற்றி பயணம் செய்ததாக கூறி, குன்னுாரை சேர்ந்த ஸ்கூட்டி உரிமையாளருக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.
'கடந்த ஆண்டு டிச., 24ல், கோத்தகிரி சோலுார் மட்டம் அருகே, அதிக ஆட்களை ஏற்றி சென்றதால், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது,' என, தெரிவித்து, ஸ்கூட்டி வைத்துள்ள குன்னுாரை சேர்ந்த சம்பத்குமார் என்பவருக்கு தற்போது தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அதில், உள்ள புகைப்படத்தில், 'பிக்- ---அப்' ஒன்றில் ஆட்கள் அமர்ந்து சென்றது பதிவாகி உள்ளது. இதனால், சம்பத் குமார் அதிர்ச்சி அடைந்தார்.
இது தொடர்பாக, போலீசாரிடம் கேட்டபோது, 'எண்கள் பதிவு செய்யும் போது தவறு ஏற்பட்டிருக்கலாம். சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனை அணுகி தெரிவிக்கலாம்,' என்றனர்.