தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ 'விஷன் ஒன் கே!' : தேயிலை தனி நபர் நுகர்வை அதிகரிக்கும்: குன்னுார் 'பிட்மா' முதல் மாநாட்டில் முடிவு

 'விஷன் ஒன் கே!' : தேயிலை தனி நபர் நுகர்வை அதிகரிக்கும்: குன்னுார் 'பிட்மா' முதல் மாநாட்டில் முடிவு

 'விஷன் ஒன் கே!' : தேயிலை தனி நபர் நுகர்வை அதிகரிக்கும்: குன்னுார் 'பிட்மா' முதல் மாநாட்டில் முடிவு


ADDED : ஜன 31, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2026 05:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குன்னுார்: 'நாட்டில் தனி நபரின் ஓராண்டு தேயிலை நுகர்வு, தற்போதுள்ள, 860 கிராமிலிருந்து ஒரு கிலோவாக அதிகரிக்கும் சிறப்பு முதன்மை திட்டமான, 'விஷன் ஒன் -கே' விரைவில் செயல்படுத்தப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி, அசாம், சிலிகிரி, உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தேயிலை உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைந்து இந்திய தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பை (பிட்மா) உருவாக்கினர். இதன் முதல் தேசிய மாநாடு, நீலகிரி மாவட்டம், குன்னுார் சி.டி.டி.ஏ., ஏல மைய அரங்கில் நடந்தது.

புதிய தலைவராக தேவன் சிங், துணை தலைவர்களாக சஞ்சய் தனோதி, தனஞ்செயன், செயலாளராக விகாஷ் மந்தானியா, நிர்வாக குழு உறுப்பினர்களாக விக்ரம், குமார் கள்ளன், சித்தார்த், செந்தில்குமார், பிரபு உட்பட பலர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன் பின் நடந்த கூட்டத்தில், 'பங்குதாரர்களிடையே உரையாடல், கூட்டமைப்பு வலுப்படுத்துதல், தரம் மேம்படுத்துவது, தேயிலை சூழல் அமைப்பின் வளர்ச்சியை உறுதி செய்வது, தேயிலை வாரியம் மற்றும் தொடர்புடைய அமைச்சர்களுடன் ஆக்கப்பூர்வமாக பணியாற்றுவது,' என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

60 கோடி கிலோ உற்பத்தி கூட்டமைப்பு தலைவர் தேவன் சிங் கூறியதாவது:

நாட்டில் உள்ள 650 தனியார் தேயிலை தொழிற்சாலைகளில், ஆண்டிற்கு, 60 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. இது லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமான தொழிலாக உள்ளது. அசாம், சிலிகிரி, நீலகிரி பகுதிகளில் உற்பத்தி செய்யும் தேயிலை அந்தந்த நிலத்தின் தன்மை, கால நிலைகளுக்கு ஏற்ற காரணங்களால் தரம் மற்றும் விலையில் மாறுபடுகிறது. நீலகிரியில் பனி காலத்தில் கிடைக்கும் தேயிலைக்கு கிராக்கி அதிகம். நல்ல விலை கிடைக்கிறது. பிற பகுதிகளில் உற்பத்தியாகும். தேயிலையின் விலையை போன்று நீலகிரியின் தேயிலை விலையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தனி நபர் நுகர்வு சர்வதேச அளவில் சீனாவில் ஒரு தனி நபரின் ஓராண்டு தேயிலை நுகர்வு நான்கு கிலோ; துருக்கியில், 3.5 கிலோ; பாகிஸ்தானில் 1.5 கிலோ என உள்ளது. நம் நாட்டில் தனி நபரின் ஓராண்டு தேயிலை நுகர்வு, தற்போதுள்ள, 860 கிராமிலிருந்து ஒரு கிலோவாக அதிகரிக்கும் சிறப்பு முதன்மை திட்டம் 'விஷன் ஒன் -கே' வாயிலாக செயல்படுத்தப்படும். இத்திட்டத்தினால் நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் தரமான தேயிலை மலிவு விலையில் கிடைக்கும். இத்துறையை பலப்படுத்த மத்திய அமைச்சகம் முன்வர வேண்டும்.

ஏற்றுமதி அதிகரிப்பு 2024ம் ஆண்டில் இந்திய தேயிலை ஏற்றுமதி, 25.5 கோடி கிலோவாக இருந்தது. 2025ல், 27.5 கோடி கிலோ ஏற்றுமதி ஆகியுள்ளது. சமீபத்தில், இந்திய-ரஷ்ய வர்த்தக ஒப்பந்தம், ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்பட்ட வர்த்தக உடன்பாடு காரணமாக, தேயிலை ஏற்றுமதி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

நம் நாட்டில் ராணுவம், ரயில்வே துறைகளுக்கு அடுத்தபடியாக வேளாண்மைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. வணிக பயிர்கள் பிரிவில் இருந்து வேளாண் துறைக்கு தேயிலையை மாற்றினால் விவசாயிகளுக்கும், மகளிருக்கும் அதிக பயன் கிடைக்கும் இவ்வாறு தேவன்சிங் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us