தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ பார்வை இழந்த மாற்றுத்திறனாளி: உதவி தொகைக்கு அலைக்கழிப்பு

பார்வை இழந்த மாற்றுத்திறனாளி: உதவி தொகைக்கு அலைக்கழிப்பு

பார்வை இழந்த மாற்றுத்திறனாளி: உதவி தொகைக்கு அலைக்கழிப்பு


ADDED : அக் 21, 2024 11:15 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 11:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி : பார்வை இழந்த மாற்றுத்திறனாளிக்கு உதவி தொகை வழங்க அலைக்கழிக்கப்படுவதால், நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஊட்டி அடுத்த முத்தோரை லீஸ் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ், 35, பார்வை இழந்த மாற்று திறனாளியான இவர், பி.ஏ., ஆங்கிலம் படித்துள்ளார். பார்வையில்லாததால் வேறு பணிக்கு ஏதுவும் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால், வேலைவாய்ப்பு அலுவலகத்தால் வழங்கப்படும் மாற்று திறனாளிகள் வேலைவாய்பற்றோர் உதவி தொகைக்கு விண்ணப்பித்து கடந்த, 10 ஆண்டுகளாக மாதந்தோறும் உதவி தொகை பெற்று வந்தார்.

இந்நிலையில், வருவாய் துறை அறிவுறுத்தலின் பேரில், மாதந்தோறும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கப்படும், 1500 ரூபாய் உதவி தொகை பெற 'ஆன்லைன்' மூலம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு விண்ணப்பித்தார்.

அப்போது, 'வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து உதவி தொகை பெறுவதால், வருவாய்த்துறை மூலம் உதவித்தொகை வழங்க இயலாது.

இதனால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை ரத்து செய்து சான்றிதழ் பெற்று வர வேண்டும்,' என, தாசில்தார் அலுவலகத்தில் அறிவுறுத்தப்பட்டது.

உதவிதொகை நிறுத்தம்


இதனால், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வாங்கி வந்த உதவி தொகையை ரத்து செய்து நாகராஜ் சான்றிதழ் வாங்கி தாசில்தார் அலுவலகத்தில் சமர்ப்பித்தார். அதன் பின்பு, அவருடைய மனு நிலுவையில் இருப்பதாக கூறி அதிகாரிகள் அலை கழித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், 'மனுதாரருக்கு உழைக்கும் திறன் உள்ளது,' என்ற காரணம் கூறி அவருடைய மனு முழுவதுமாக நிராகரிக்கப்பட்டது. அவருக்கு குறுந்தகவலும் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ், தனது தாயுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us