/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவேகானந்தர் விழா : மாணவர்கள் பங்கேற்பு
/
விவேகானந்தர் விழா : மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 16, 2024 10:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்;கூடலுார், தொரப்பள்ளி குனில்வயல் பகுதியில், விவேகானந்தரின், 161வது பிறந்தநாள் விழா நடந்தது.
முதுமலை ஊராட்சி மன்ற கவுன்சிலர் நாராயணன் வரவேற்றார். விழாவுக்கு, ஸ்ரீமதுரை ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை வகித்து, விவேகானந்தர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, பா.ஜ., ஊடகப்பிரிவு தலைவர் சிவக்குமார், ராஷ்ட்ரிய சுயம் சேவா சங்க உறுப்பினர்கள் அருண், ராஜேஷ், ரமேஷ் உட்பட பலர் பேசினர். பொதுமக்கள்; மாணவர்கள் விவேகானந்தர் படத்துக்கு மாலை அணிவித்தனர்.

