ADDED : பிப் 12, 2024 11:03 PM

சூலுார்:ராசி பாளையம் உயர்நிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது.
முத்துக்கவுண்டன் புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், ராசிபாளையம் உயரநிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது. விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு, அவரின் கருத்துகள் குறித்து மாணவர்கள் பேசினர்.
பேராசிரியர் விவேகானந்தர் பேசுகையில், 'சுவாமிஜிக்கு ஆன்மிகத்தின் மீதும், தேசத்தின் மீதும் மிகுந்த பற்று இருந்தது. ஆன்மிகம், தேசப்பற்று கொண்ட இளைய தலைமுறையினர் உருவாக அவர் தனது வாழ்வையே அர்ப்பணித்தார்.
ஹிந்து தர்மத்தின் உயர்வுகளை வெளிநாடுகளில் பரப்பினார். உலகில் இன்றும் அவரது கருத்துக்கள் நிலைத்து நிற்கின்றன. அதனால், சுவாமிஜியின் வழிகாட்டுதல் படி நடந்து சமுதாயத்தில் அனைவரும் உயர்ந்திட வேண்டும்,' என்றார்.
இயக்க நிர்வாகிகள் சோமசுந்தரம், சம்பத்குமார் மற்றும் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ, மாணவியருக்கு, விவேகானந்தர் புத்தகங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.