/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்னொளியில் நடந்த வாலிபால் போட்டி: 24 அணிகள் பங்கேற்பு
/
மின்னொளியில் நடந்த வாலிபால் போட்டி: 24 அணிகள் பங்கேற்பு
மின்னொளியில் நடந்த வாலிபால் போட்டி: 24 அணிகள் பங்கேற்பு
மின்னொளியில் நடந்த வாலிபால் போட்டி: 24 அணிகள் பங்கேற்பு
ADDED : மார் 18, 2025 09:25 PM

கூடலுார்:
கூடலுார் கோழிப்பாலத்தில் மின்னொளியில் நடந்த வாலிபால் போட்டியில், 24 அணிகள் பங்கேற்று விளையாடின.
கூடலுார் கோழி பாலத்தில், டைகர் ஸ்டார் விளையாட்டு குழு சார்பில் வாலிபால் போட்டிகள் நடந்தது. போட்டிகள் மதியம், 1:30 மணிக்கு துவங்கியது. அதில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த, 24 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டிகள், இரவு மின் ஒளியில் நடைபெற்றது. நள்ளிரவு, 12:00 மணிக்கு, கூடலுார் எஸ்.எப்.எஸ்.சி., அணி, கோத்தகிரி வேதா அணிக்கு இடையே இறுதி போட்டி நடந்தது.
அதில், எஸ்.எப். எஸ்.சி., அணி வெற்றி பெற்று, முதலிடம் பெற்றது. தொடர்ந்து, பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், தி.மு.க., நகர செயலாளர் பாபு, நகராட்சி கவுன்சிலர் சகுந்தலாதேவி, கோவில் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்று, முதல் பரிசாக எஸ்.எப்.எஸ்.சி., அணிக்கு வெற்றி கோப்பையுடன், 10 ஆயிரம் ரூபாய்; 2வது பரிசு கோத்தகிரி வேதா அணிக்கு, 7000 ரூபாய்; 3வது இடம் பெற்ற ரமேஷ் பிரதர்ஸ் அனுப்பி, 5000 ரூபாய்; 4வது இடம் பெற்ற டைகர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அணிக்கு, 3000 ரூபாய் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. மின்னொளியில் நடந்த போட்டிகளை, ரசிகர்கள் கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர்கள் செய்தனர்.