/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை - பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்த வாலிபால் போட்டி
/
வனத்துறை - பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்த வாலிபால் போட்டி
வனத்துறை - பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்த வாலிபால் போட்டி
வனத்துறை - பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்த வாலிபால் போட்டி
ADDED : மே 23, 2025 06:49 AM

கூடலுார் : கூடலுார் ஓவேலி பகுதியில் வனத்துறை -பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, 'தடம்' கமிட்டிகள் இடையே வாலிபால் போட்டி நடந்தது.
கூடலுார் வன கோட்டத்தில், மனித -- வனவிலங்கு மோதலை தடுக்கவும், வனத்துறை - - பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு வனச்சரகங்களில் பொதுமக்களை இணைத்து 'தடம்' என்ற கமிட்டிகளை அமைத்துள்ளனர்.
அதில், ஓவேலி வனச்சரகத்தில், பார்வுட், ஆருட்டுப்பாறை பகுதிகளில் தடம் கமிட்டி அமைத்துள்ளனர். வனத்துறை சார்பில் கமிட்டிகள் இடையேயான வாலிபால் போட்டி ஓவேலி சூண்டி உயர்நிலை பள்ளியில் நடந்தது. போட்டியை வனச்சரகர் சுரேஷ்குமார் துவக்கி வைத்தார். அதில், ஆருட்டுப்பாறை அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணி, கூடலுார் வன கோட்ட அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றது.
வனத்துறையினர் கூறுகையில், 'கூடலுார் வனக் கோட்டத்தில் வனத்துறை -- பொதுமக்கள் இடையே நல்லுறவு ஏற்படுத்தவும், வனவிலங்குகள் நடமாட்டம், சந்தேகப்படும் நபர்கள் குறித்த தகவல்கள் பரிமாறி கொள்ளும் வகையில், 24 தடம் கமிட்டி அமைக்கப்பட்டுஉள்ளது.
வனச்சரகங்களில் அமைக்கப்பட்டுள்ள தடம் கமிட்டிகள் இடையே, வாலிபால் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதலிடம் பெறும் அணிகள் இடையே வனக்கோட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் அணிக்கு பரிசுகள் வழங்கப்படும்,' என்றனர்.