ADDED : செப் 04, 2026 03:28 AM

அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட, 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில், நேற்று மதியம் மாணவர்கள் சத்துணவு சாப்பிட்டனர். அதில், 19 மாணவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக ஊட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட, 12 மாணவர்கள் ஊட்டி நகரில் உள்ள, அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் சிகிச்சை பெறுகின்றனர். கெட்டுப்போன முட்டைகளை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
