/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
போனஸ் கேட்டு காத்திருப்பு போராட்டம்; பேச்சுவார்த்தைக்கு பின் சுமுகம்

ADDED : அக் 24, 2024 08:46 PM

ஊட்டி : ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் போனஸ் கேட்டு நகராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஊட்டி நகராட்சியில், 150க்கும் மேற்பட்ட ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான தீபாவளி போனஸ், 8.3 சதவீதம் கேட்டு ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன் குவிந்தனர். இந்நிலையில், 'ஒப்பந்ததாரரின் துாய்மை பணிக்கான ஒப்பந்தம் ஓராண்டு நிறைவடைந்து இருந்தால், அதை கொடுக்கலாம்; ஒப்பந்தம் எடுத்து எட்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பணியாளர்கள் கேட்கும் போனசை வழங்க முடியாது,' என தெரிவிக்கப்பட்டது.
இதனால், நேற்று முன்தினம் மாலை முதல் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, டவுன் டி.எஸ்.பி., யசோதா, நகராட்சி சுகாதார அலுவலர் சிபி ஆகியோர் துாய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மூன்று மணிநேர பேச்சு வார்த்தைக்கு பின், உடன்பாடு எட்டப்பட்டதால், இரவு, 9:00 மணிக்கு போராட்டம் கைவிடப்பட்டது.