தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ காத்திருக்கும் நோயாளிகள்!

 காத்திருக்கும் நோயாளிகள்!

 காத்திருக்கும் நோயாளிகள்!


ADDED : ஜன 29, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 04:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுாரில் நாள்தோறும் சிகிச்சைக்காக திறந்த வெளியில்... திறக்கப்படாத புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தால் அதிருப்தி

கூடலுார்: கூடலுார் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடப்பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் திறக்கப்படாததால், நோயாளிகள் திறந்த வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, உழவர் சந்தையை ஒட்டி நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிறிய கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

அங்கு மருந்து உள்ளிட்ட பொருட்கள் வைக்கவும், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் அமர்ந்து பணியாற்ற போதுமான இடவசதியில்லை. இதனால், கடந்த, 10 ஆண்டுகளாக நோயாளிகள் கட்டடத்தின் வெளியே, நகராட்சி ஊழியர்கள் குடியிருப்புக்கு சென்று வர பயன்படுத்தி வரும், சாலையில் திறந்தவெளியில், காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மழை காலத்தில் முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ரூ.1.20 கோடியில் புதிய கட்டடம் பல ஆண்டுகள் தொடரும் பிரச்னைக்கு தீர்வாக, மைசூரு தேசிய நெடுஞ்சாலை புதிய கோர்ட் அருகே, 1.20 கோடி ரூபாய் செலவில் நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. ஆனால், இதுவரை திறக்கப்படவில்லை. இதனால், நோயாளிகள் தற்போதைய உறைப்பனி காலத்தில், காலை நேர வெயிலில் நீண்ட நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். வாகனங்கள் சென்று வரும் சாலையில் காலை முதல் அமர்ந்து நோயாளிகள் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதற்கு தீர்வாக, நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை, புதிய கட்டடத்திற்கு மாற்ற வலியுறுத்தி உள்ளனர்.

நோயாளிகள் கூறுகையில், 'தற்போது, நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வரும் கட்டடத்தில் போதிய இட வசதி இன்றி, நாங்கள் திறந்தவெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கிறோம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்திற்கு சுகாதார நிலையத்தை மாற்ற அரசு உடனடியாக நடவடக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

எந்த அடிப்படை வசதிகளும் இல்லை

சமூக ஆர்வலர் ஆனந்தசைனன் கூறுகையில், ''கூடலுார் நகர சுகாதார நிலையம், சிறிய கட்டடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு, தினமும், 200 நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த கட்டடத்தில் போதிய இட வசதி இல்லாததால், சாலையில் திறந்த வெளியில் காத்திருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அவசர நேரத்தில் நோயாளிகள் பயன்படுத்த எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இது குறித்து, மாநில அரசுக்கும், மருத்துவ துறைக்கும் மனுக்கள் அனுப்பியும் பயனில்லை. எனவே, புதிய கோர்ட் அருகே, புதிதாக கட்டப்பட்டுள்ள சுகாதார நிலைத்தை உடனடியாக திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us