/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு; கலெக்டர் தலைமையில் ஆய்வு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு; கலெக்டர் தலைமையில் ஆய்வு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு; கலெக்டர் தலைமையில் ஆய்வு
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு; கலெக்டர் தலைமையில் ஆய்வு
ADDED : நவ 19, 2024 11:34 PM
ஊட்டி; மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள கிடங்கில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. இங்கு லோக்சபா, சட்டசபை தேர்தல் உட்பட அனைத்து தேர்தல்களுக்கும் பயன்படுத்தப்படும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை, அவ்வப்போது அரசியல் கட்சியினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு மேற்கொள்வது வழக்கம்.
ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்குகளில் சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி அறைகளாக பிரிக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை திறக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, ஊட்டி ஆர்.டி.ஓ.,சதீஷ், தாசில்தார் சரவணகுமார் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.