/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
எச்சரிக்கை...! அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளபெருக்கு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
/
எச்சரிக்கை...! அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளபெருக்கு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
எச்சரிக்கை...! அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளபெருக்கு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
எச்சரிக்கை...! அணைகள் திறக்கப்பட்டதால் வெள்ளபெருக்கு; கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுரை
ADDED : அக் 15, 2025 10:58 PM

ஊட்டி: 'ஊட்டி அருகே எமரால்டு, போர்த்திமந்து அணைகளில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்,' என, வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஊட்டி அருகே காட்டு குப்பையில், 1,850 கோடி ரூபாயில், 4 பிரிவுகளில் தலா,125 மெகாவாட் வீதம், 500 மெகாவாடுக்கான குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது.
2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து, கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
மழையால் பணியில் தாமதம் அவ்வப்போது பெய்யும் மழை காரணமாக, இறுதிகட்ட பணிகளை, 2022ம் ஆண்டு முடிக்க முடிாயமல் தாமதம் ஏற்பட்டது.
இந்த தாமதம் குறித்து சமீபத்தில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், அனைத்து பணிகளையும் விரைவில் முடிக்க உத்தரவிட்டனர். ஆனால், குந்தா நீரேற்று மின் திட்டம் பணிகள் நடக்கும் காட்டுகுப்பை பகுதியை ஒட்டியுள்ள எமரால்டு (184 அடி), போர்த்திமந்து (130 அடி) அணைகளில் பருவ மழையின் காரணமாக, தண்ணீர் முழு கொள்ளளவில் இருப்பதால், மேற்கொண்டு பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வினாடிக்கு 1,000 கன அடி வெளியேற்றம் இந்நிலையில், எமரால்டு, போர்த்திமந்து அணைகளிலிருந்து, 150 கன அடி நீரை வெளியேற்றினால் தான் இறுதி கட்ட பணிகளை மேற்கொள்ள முடியும்.
இதன் காரணமாக, குந்தா மேற்பார்வை செயற்பொறியாளர் பிரபு தலைமையில் எமரால்டு அணை திறக்கப்பட்டது. வினாடிக்கு, 1,000 கனஅடி வீதம், மதகுகள் வழியாக, தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
வருவாய் துறை அறிவிப்பு அங்குள்ள ஆற்றில் செல்லும் தண்ணீர் குந்தா அணையில் சேகரமாகிறது. மீண்டும் இரண்டு மதகுகள் வழியாக பில்லுார் அணைக்கு சென்று, மேட்டுப்பாளையம் பவானி அணைக்கு செல்கிறது.
இதனால், மேட்டூர், ஈரோட்டில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவசாயத்திற்கும் இந்த தண்ணீர் பயன்படுகிறது. அதேபோல், பில்லுார் அணையில் சேகரமாகும் தண்ணீர், பில்லுார் கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக, கோவை மாநகராட்சியில் பெரும்பாலான வார்டுகளுக்கு தடையின்றி வினியோகிக்கப்படுகிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை இந்நிலையில், எமரால்டு- குந்தா வரை ஆற்றை ஒட்டி பல ஏக்கரில் தேயிலை, மலை காய்கறி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பல குடியிருப்புகளும் உள்ளன. இவர்களின் பாதுகாப்பு கருதி, 'ஆற்றோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்; வெள்ள பெருக்கு அதிகரித்தால் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
மேலும், விவசாய தோட்டங்களுக்கு இடையே தண்ணீர் செல்வதால், தோட்ட பணிக்கு செல்லும் விவசாயிகள்; தொழிலாளர்கள் கவனமுடன் சென்று வரவேண்டும்.
கால்நடை வளர்ப்போர் கவனமுடன் மேய்ச்சலுக்கு விடவேண்டும்,' என, வருவாய் துறையினர் எச்சரித்துள்ளனர்.