ADDED : ஏப் 09, 2026 07:48 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நகராட்சியின் மெத்தனத்தால் குடிநீர் வீணாகி வருகிறது.
குன்னுார் நகராட்சி சார்பில், 30 வார்டுகளுக்கு ரேலியா அணை மற்றும் எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில், ரேலி காம்பவுண்ட் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து நகராட்சிக்கு புகார் தெரிவித்தும் தீர்வு காணவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். வெயிலின் தக்கம் அதிகரித்து உள்ள நிலையில் மக்கள் குடிநீருக்காக திண்டாடி வருகின்றனர்.
