/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சாலையில் தேங்கும் கழிவு நீர்: சுற்றுச்சூழல் பாதிப்பு
/
சாலையில் தேங்கும் கழிவு நீர்: சுற்றுச்சூழல் பாதிப்பு
சாலையில் தேங்கும் கழிவு நீர்: சுற்றுச்சூழல் பாதிப்பு
சாலையில் தேங்கும் கழிவு நீர்: சுற்றுச்சூழல் பாதிப்பு
ADDED : ஆக 25, 2025 09:05 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே அத்திக்குன்னா கோவில் முன்பாக தேங்கிய கழிவு நீர், சாலையில் வழிந்தோடுவதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.
பந்தலுார் அருகே அத்திக்குன்னா பகுதி தனியார் எஸ்டேட் மற்றும் கடைவீதி, தொழிலாளர் குடியிருப்புகள் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதியாக உள்ளது. அதில், தொழிலாளர் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல, கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கால்வாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டு உள்ளதால், கழிவு நீர் வழிந்தோட வழி இல்லாமல், சாலையில் நிறைந்து ஓடுகிறது. அம்மன் கோவில் முன்பாக சாலையில் வழிந்தோடும் கழிவு நீரால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம், கழிவு நீர் வழிந்தோட ஏதுவாக கால்வாயை துார்வாரி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.