ADDED : ஜன 14, 2026 06:33 AM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் ஹவுசிங் யூனிட் ஸ்ரீநகர் பகுதியில் மெயின் குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது.
குன்னுார் வண்ணாரப்பேட்டை அருகே ஹவுசிங் யூனிட் ஸ்ரீநகர் பகுதியில், கடந்த சில நாட்களாக மெயின் குடிநீர் குழாயில் குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், இப்பகுதியில் குடிநீர் முறையாக கிடைப்பதில்லை.
இது குறித்து மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், கோடை காலங்களில் குடிநீர் பிரச்னை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் அடிக்கடி ஏற்படும் இந்த பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
