/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தமிழகம் வரும் கேரளா பஸ்களில் தாராளமாய் தண்ணீர் பாட்டில்கள்
/
தமிழகம் வரும் கேரளா பஸ்களில் தாராளமாய் தண்ணீர் பாட்டில்கள்
தமிழகம் வரும் கேரளா பஸ்களில் தாராளமாய் தண்ணீர் பாட்டில்கள்
தமிழகம் வரும் கேரளா பஸ்களில் தாராளமாய் தண்ணீர் பாட்டில்கள்
ADDED : ஏப் 18, 2025 11:57 PM

பந்தலுார்: பந்தலுார் வழியாக வந்து செல்லும், கேரளா மாநில அரசு பஸ்களில், தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் அதிக அளவு எடுத்து வரப்படுகிறது.
நீலகிரி முதல் கன்னியாகுமரி வரையிலான மேற்கு தொடர்ச்சி மலை முழுவதும், 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த, இருப்பில் வைக்க எடுத்து செல்ல, உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரளா மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குள் வந்து செல்லும், அனைத்து அரசு பஸ்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அதிக அளவில் எடுத்து செல்லப்படுகிறது. அத்துடன் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் மற்றும் மைசூரு பகுதிகளில் இருந்து, பிளாஸ்டிக் பாட்டில்கள் அரசு பஸ்களில் எடுத்து வரப்படுகிறது.மாநில எல்லை சோதனை சாவடிகளில், இந்த பஸ்களை முழுமையாக சோதனை செய்வதில்லை.
எனவே, மலப்புரம் மற்றும் வயநாடு பகுதிகளில் இருந்து, தமிழகத்திற்குள் வரும் அனைத்து தமிழக, கேரளா பஸ்களையும் முழுமையான ஆய்வுக்கு பின் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

