/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்: டிரைவர்களுக்கு ரூ. 26,400 அபராதம்
/
தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்: டிரைவர்களுக்கு ரூ. 26,400 அபராதம்
தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்: டிரைவர்களுக்கு ரூ. 26,400 அபராதம்
தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்: டிரைவர்களுக்கு ரூ. 26,400 அபராதம்
ADDED : அக் 26, 2025 08:57 PM
ஊட்டி: ஊட்டியில் தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வந்த, சுற்றுலா வாகன டிரைவர்களுக்கு, 26,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏதுவாக, மாவட்ட நிர்வாகம், ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் குளிர்பான பாட்டில்கள் உட்பட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
குறிப்பாக, நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை அந்தந்த சோதனை சாவடிகளில் தணிக்கை செய்து, சுற்றுலா பயணிகள் தண்ணீர் பாட்டில்கள் கொண்டு வரும் பட்சத்தில், அங்கேயே பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று, ஊட்டி தாசில்தார் சங்கர் கணேஷ் தலைமையிலான வருவாய் துறை உட்பட, அரசு அலுவலர்கள் திடீர் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அரசு தாவரவியல் பூங்கா சாலையில் அமைந்துள்ள என்.சி.எம். எஸ்., 'பார்க்கிங்' தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கேரளா, கர்நாடகா, கோவா உட்பட வெளிமாநிலத்தில் இருந்து வந்த சுற்றுலா வாகனங்களில், தடை செய்யப்பட்ட, 264 ஒரு லிட்டர் பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது.
பாட்டில்களை பறிமுதல் செய்த, அதிகாரிகள், ஊட்டி நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்து, வாகன டிரைவர்களுக்கு, 26, 400 ரூபாய் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.

