/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு'
/
'நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு'
'நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு'
'நிலுவை வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு'
ADDED : பிப் 23, 2024 11:03 PM

அன்னுார்:'நிலுவை வரி செலுத்தாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என, பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சொத்து வரி செலுத்துவோர் 9,888 பேரும், குடிநீர் இணைப்புதாரர்கள் 5,662 பேரும் உள்ளனர். சொத்து வரியாக ஒரு கோடியே 72 லட்சம் ரூபாயும், குடிநீர் கட்டணமாக, 84 லட்சத்து 37 ஆயிரம் ரூபாயும் வசூல் ஆக வேண்டும்.
தொழில் வரி, உரிம கட்டணம் என, 50 லட்சம் ரூபாய் வரை வசூல் ஆக வேண்டி உள்ளது. பேரூராட்சியில், 10 குழுக்களாக அலுவலர்கள் ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, வீதி வீதியாக சென்று வீடுகள், கடைகள் மற்றும் தொழிற்சாலைகளில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, உரிமக் கட்டணம் வசூலித்து உடனடியாக ரசீது வழங்கி, வருகின்றனர்.
ஊழியர்கள் கூறுகையில், 'பேரூராட்சியில் தொழில் வரி மட்டும் 100 சதவீதம் வசூல் ஆகியுள்ளது. ஆனால் குடிநீர் கட்டணம் வெறும் 55 சதவீதம் மட்டுமே வசூல் ஆகியுள்ளது.
சொத்து வரி 75 சதவீதமும், உரிம கட்டணம் 80 சதவீதமும் வசூல் ஆகி உள்ளது. வரி நிலுவை வைத்துள்ளவர்கள், வீட்டு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்' என்றனர்.