/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அடிக்கடி குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
/
அடிக்கடி குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
அடிக்கடி குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
அடிக்கடி குழாய் உடைந்து ரோட்டில் வீணாகும் குடிநீர்
ADDED : மார் 05, 2024 12:02 AM

சூலுார், மார்ச் 5- -
சூலுாரில் திருச்சி ரோட்டின் நடுவில் உள்ள பிரதான குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சூலுார் பேரூராட்சியில் தெற்கு பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யும் பிரதான குழாய் திருச்சி ரோட்டின் நடுவில் உள்ளது. கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், குடிநீர் குழாய் அடிக்கடி பல இடங்களில் உடைந்து தண்ணீர் வீணாவது வாடிக்கையாக உள்ளது.
நேற்று தெற்கு பகுதிக்கு குடிநீர் சப்ளை செய்ய தண்ணீர் திறக்கப்பட்டது. பழைய பஸ் ஸ்டாண்டை அடுத்து நடு ரோட்டில் குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாக ரோட்டில் ஓடியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,''அடிக்கடி குழாய் உடைவதால், எங்களுக்கு குடிநீர் முறையாக வருவதில்லை. வெயில் காலத்தில் இப்படி தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. பேரூராட்சி நிர்வாகம் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்,'' என்றனர்.
இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், ''திருச்சி ரோட்டின் நடுவில் உள்ள பழைய பிரதான குழாய்க்கு பதிலாக, ரோட்டின் ஓரத்தில் புதிய குழாய் பதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அனுமதி கிடைத்தவுடன், புதிய குழாய் பதிக்கும் பணியை விரைந்து நடத்த முடிவு செய்துள்ளோம்,'' என்றனர்.

