/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மழை பொழிவால் 13 அணைகளில் எட்டு அடி வரை நீர் மட்டம் உயர்வு! தினசரி மின் உற்பத்தி 700 மெகாவாட்டாக அதிகரிப்பு
/
மழை பொழிவால் 13 அணைகளில் எட்டு அடி வரை நீர் மட்டம் உயர்வு! தினசரி மின் உற்பத்தி 700 மெகாவாட்டாக அதிகரிப்பு
மழை பொழிவால் 13 அணைகளில் எட்டு அடி வரை நீர் மட்டம் உயர்வு! தினசரி மின் உற்பத்தி 700 மெகாவாட்டாக அதிகரிப்பு
மழை பொழிவால் 13 அணைகளில் எட்டு அடி வரை நீர் மட்டம் உயர்வு! தினசரி மின் உற்பத்தி 700 மெகாவாட்டாக அதிகரிப்பு
ADDED : ஆக 19, 2025 09:13 PM

ஊட்டி: நீலகிரியில் கடந்த ஒரு வாரமாக பரவலாக பெய்த மழையால், 13 அணைகளில் எட்டு அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில், குந்தா, பைக்காரா நீர் மின் திட்டத்தின் கீழ், குந்தா, கெத்தை, அவலாஞ்சி, காட்டுகுப்பை, பைக்காரா, சிங்காரா உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் செயல்படுகின்றன.
13 அணைகளில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் வாயிலாக தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் திறன் உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் நீலகிரிக்கு தேவையான, 70 மெகாவாட் போக, மீதமுள்ள மின்சாரம் சமவெளி பகுதிக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக பெய்தபருவ மழை நீலகிரியில் நடப்பாண்டில் ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவ மழை, இம்முறை முன்கூட்டியே மே மாதம் இறுதியில் துவங்கி மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான அப்பர் பவானி, அவலாஞ்சி, பைக்காரா,பார்சன்ஸ்வேலி, போர்த்தி மந்து பகுதிகளில் அதிகளவில் மழை பெய்தது. நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைகளில் வினாடிக்கு, 500, 800, 1000 கன அடி வீதம் தண்ணீர் வரத்து அதிகரித்தது. பைக்காரா, அவலாஞ்சி, குந்தா, பில்லூர் அணைகள்முழு கொள்ளளவை எட்டியதால் அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. பிற அணைகளிலும் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.
எட்டு அடி வரை நீர்மட்டம் உயர்வு மே இறுதியில் துவங்கிய தென்மேற்கு பருவ மழை அவ்வப்போது தொடர்ந்து பெய்தது. மழை ஓய்ந்த சமயங்களில் இதமான காலநிலை நிலவியது. கடந்த ஒருவாரமாக, ஊட்டி, குந்தா, கூடலுார், பந்தலுார் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மழைக்கு நீரோடைகளில் வழக்கத்தை விட தண்ணீர் வரத்து அதிகரித்தது. மின் உற்பத்திக்கான அணைகளில், எட்டு அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
12 மின் நிலையங்களில் உள்ள, 32 பிரிவுகளின் கீழ் மின் உற்பத்தி நடந்து வருகிறது. அணைகளில், 90 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது.
கடந்த வாரம் வரை, 500 முதல் 600 மெகாவாட்தினசரி மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்ட நிலையில், கடந்த மூன்று நாட்களாக தினசரி மின் உற்பத்தி, 700 மெகாவாட்டை எட்டி உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததில், இங்குள்ள அணைகளில், 90 சதவீதம் தண்ணீர் இருப்பில் உள்ளது. மின் உற்பத்தியும் தேவைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த ஒரு வாரமாக தினசரி மின் உற்பத்தி, 700 மெகா வாட்டை எட்டியுள்ளது. நடப்பாண்டு இறுதி வரை மின் உற்பத்தி சீராக மேற்கொள்ள முடியும்,' என்றனர்.