sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் படிப்படியாக குறையுது தண்ணீர்! மின் உற்பத்திக்கான, 12 பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தம்

/

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் படிப்படியாக குறையுது தண்ணீர்! மின் உற்பத்திக்கான, 12 பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் படிப்படியாக குறையுது தண்ணீர்! மின் உற்பத்திக்கான, 12 பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தம்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் படிப்படியாக குறையுது தண்ணீர்! மின் உற்பத்திக்கான, 12 பிரிவுகளில் உற்பத்தி நிறுத்தம்


ADDED : மே 04, 2025 09:50 PM

Google News

ADDED : மே 04, 2025 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி; நீலகிரி அணைகளில் தண்ணீர் அளவு படிப்படியாக குறைந்து வருவதால், 12 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், முக்கூர்த்தி,பைக்காரா, சாண்டிநல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர் பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு,குந்தா, கெத்தை, பில்லுார் ஆகிய, 13 அணைகள் உள்ளன.

அதில், குந்தா மின் வட்டத்தில், 'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி காட்டுக்குப்பை,' என, 6 மின் நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில் முக்கூர்த்தி, பைக்காரா, சிங்காரா, மாயாறு, மரவகண்டி, பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம்,' என, , 6 மின் நிலையங்கள் உள்ளன.

மாவட்டத்தில் உள்ள, 12 மின் நிலையங்களில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது, அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர், மின் உற்பத்திக்கு படிப்படியாக எடுக்கப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மூன்று மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மாவட்டங்களுக்கு பிரித்து வினியோகிக்கப்படுகிறது. குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக எமரால்டில், 70 சதவீதம்; போர்த்தி மந்தில், 50 சதவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பிற அணைகளிலும் தண்ணீர் மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதால் தண்ணீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.

12 பிரிவில் உற்பத்தி நிறுத்தம்


இந்நிலையியில், மின் உற்பத்தி செய்யப்படும், 12 'யூனிட்'களில், குந்தா-1, கெத்தை-2, பரளி - -2, பில்லுார்-- 1, பைக்காரா-1,மாயாறு-2, முக்கூர்த்தி-2, சிங்காரா -1,' ஆகிய மின் நிலையங்களில் தண்ணீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தி மேற்கொள்ள வேண்டி இருப்பதால், 12 பிரிவில் மட்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'நடப்பாண்டில் இதுவரை எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. கெத்தை மின் நிலையம், 'பீக் ஹவர்' எனப்படும் காலை, 6:00 மணி முதல் 9:00 மணி வரை; மாலை, 6:00 மணி முதல் இரவு, 9:00 மணி வரை மின் உற்பத்திக்கு கை கொடுக்கிறது.

பெரிய அணையாக கருதப்படும், 210 அடி உயரம் கொண்ட அப்பர் பவானி அணையில், அவ்வப்போது மின் உற்பத்திக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால், 120 அடி வரை மட்டுமே தண்ணீர் இருப்பில் உள்ளது. கோடை மழை முடியும் தருவாயில், தென்மேற்கு பருவ மழை சரியான நேரத்தில் துவங்கினால் மின் உற்பத்தியில் பிரச்னையின்றி சமாளிக்க முடியும்,' என்றார்.






      Dinamalar
      Follow us