/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் சரிகிறது நீர்மட்டம்! மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
/
மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் சரிகிறது நீர்மட்டம்! மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் சரிகிறது நீர்மட்டம்! மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் சரிகிறது நீர்மட்டம்! மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
ADDED : மே 19, 2025 08:50 PM

ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால், மின் உற்பத்தி, கூட்டு குடிநீர் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும் அபாயம் உருவாகி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில், 'முக்கூர்த்தி, பைக்காரா, சாண்டினல்லா, கிளன்மார்கன், மாயார், அப்பர்பவானி, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா, கெத்தை, பில்லுார்,' ஆகிய, 13 அணைகள் உள்ளன.
அதில், குந்தா மின் வட்டத்தில்,'குந்தா, கெத்தை, பரளி, பில்லுார், அவலாஞ்சி காட்டுக்குப்பை,' என, 6 மின் நிலையங்கள் உள்ளன. பைக்காரா மின் வட்டத்தில், 'முக்கூர்த்தி, பைக்காரா, சிங்காரா, மாயாறு, மரவகண்டி, பைக்காரா இறுதி நிலை புனல் மின் நிலையம்,' என, , 6 மின் நிலையங்கள் உள்ளன. மாவட்டத்தில் உள்ள, 12 மின் நிலையங்களில், 833.65 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். அணைகளில் இருப்பில் உள்ள தண்ணீர் படிப்படியாக அவ்வப்போது மின் உற்பத்திக்கு எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், குந்தா வட்டத்தில், எமரால்டு-184 அடி உயரம்; எமரால்டு-171; அப்பர்பவானி, 210; பைக்காரா, 100 அடி,' என, மாவட்டத்தின் மின் உற்பத்திக்கு இந்த அணைகள் முக்கிய பங்காற்றி வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் ஈரோடு, மதுரை, சென்னை ஆகிய மூன்று மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பிற மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
உற்பத்தி குறைந்தது
இந்நிலையில், குந்தா (பிரிவு-2), கெத்தை- 3, பரளி- 2, பில்லுார்-1, பைக்காரா-2, மாயாறு-2, முக்கூர்த்தி-2, சிங்காரா -2,' ஆகிய மின் உறப்பத்தி நிலையங்களில் தண்ணீரின் அளவை பொறுத்து மின் உற்பத்தி மேற்கொள்ள வேண்டி இருப்பதால், 16 பிரிவுகளில் (யூனிட்) மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பிற மின் நிலையங்களிலும் உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'நடப்பாண்டில் இதுவரை மின் உற்பத்தியை தடையின்றி மேற்கொள்ளும் அளவுக்கு, எதிர்பார்த்த அளவு மழை இல்லை. கெத்தை மின் நிலையத்தில், 'பிக்ஹவர்' எனப்படும் காலை, 6:00 மணி முதல் 9:00 மணி வரையும்; மாலை, 6:00 மணி முதல் இரவு, 9: 00 மணி வரையும் மின் உற்பத்திக்கு கை கொடுக்கிறது.
பெரிய அணையாக கருதப்படும் அப்பர் பவானி அணையில் இருந்து அவ்வப்போது மின் உற்பத்திக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, அணைகளில், 35 சதவீதம் அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. அடுத்து துவங்க உள்ள தென் மேற்கு பருவ மழை தொடர்ச்சியாக பெய்தால் மட்டுமே தடையின்றி மின் உற்பத்தியை மேற்கொள்ள முடியும்,' என்றனர்.