/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இரண்டு மாதம் வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தம்! காட்டுக்குப்பையில் இறுதி கட்ட பணியில் 'விறுவிறு'
/
இரண்டு மாதம் வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தம்! காட்டுக்குப்பையில் இறுதி கட்ட பணியில் 'விறுவிறு'
இரண்டு மாதம் வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தம்! காட்டுக்குப்பையில் இறுதி கட்ட பணியில் 'விறுவிறு'
இரண்டு மாதம் வெளியேற்றப்பட்ட தண்ணீர் நிறுத்தம்! காட்டுக்குப்பையில் இறுதி கட்ட பணியில் 'விறுவிறு'
ADDED : டிச 18, 2025 07:06 AM

ஊட்டி: குந்தா நீரேற்று மின் திட்ட பணிக்காக வெளியேற்றப்பட்ட தண்ணீர், இரண்டு மாதங்களுக்கு பின், நிறுத்தப்பட்ட நிலையில் பணிகள் 'விறுவிறுப்பாக' நடந்து வருகிறது.
ஊட்டி அருகே காட்டு குப்பை பகுதியில், 1,850 கோடி ரூபாயில், 4 பிரிவுகளில் தலா,125 மெகாவாட் வீதம், 500 மெகாவாட் உற்பத்திக்கான, குந்தா நீரேற்று மின் திட்ட பணிகள் நடந்து வருகிறது.
அதில், 2 கி.மீ., துாரம் சுரங்கப்பாதை அமைக்கும் பணி முடிந்து கட்டுமான பணிகள் மற்றும் மின் சாதனங்கள் பொருத்துவது உள்ளிட்ட பணிகள், 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எமரால்டு மற்றும் போர்த்தி மந்து அணைகளிலிருந்து தண்ணீர் வெளியேற்றினால் தான் அடுத்த கட்டப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, எமரால்டு, போர்த்தி மந்து அணைகளிலிருந்து, 180 அடி வரை தண்ணீர் வெளியேற்ற திட்டமிடப்பட்டது. தொடர்ந்து, நீர் வெளியேற்றும் பணி அக்., மாதம் துவங்கியது. வினாடிக்கு, 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இரண்டு மாத காலத்தில், 180 அடி வரை நீர் வெளியேற்றப்பட்டது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு தண்ணீர் நிறுத்தப்பட்டது.
மின் திட்ட பணிகள் 'விறுவிறு'
இப்பணிகள் கடந்த, 10 ஆண்டுக்கு மேலாக நடந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு முதல் பிரிவுக்கான பணிகள் முடிந்து உற்பத்தி துவங்கி இருக்க வேண்டும். ஆனால், காலநிலை மாற்றம், நிர்வாக ரீதியான பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஆய்வில், 'பணிகளை விரைப்படுத்த வேண்டும்,' என, மின் வாரியம் ஆய்வு மேற்கொண்டு உத்தரவிட்டதை அடுத்து பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வெளியேற்றப்பட்ட தண்ணீரால் பில்லுார் கூட்டு குடிநீர் திட்டத்தில், தேவைக்கேற்ப தண்ணீரை சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால், கோவை மக்களுக்கு இன்னும் மூன்று மாதம் தடையின்றி குடிநீரை வினியோக்க முடியும்.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், குந்தா நீரேற்று மின் திட்ட பணியை விரைவுப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டதை அடுத்து, மின்வாரிய உயர் அதிகாரிகள் இங்கேயே முகாமிட்டு பணிகளை விரைவுபடுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு மே இறுதிக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்,' என்றனர்.

