/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கிணறு சீரமைப்பு பணியால் குடிநீர் தட்டுப்பாடு; நகராட்சி லாரியில் தண்ணீர் 'சப்ளை'

ADDED : ஏப் 29, 2025 09:06 PM

கூடலுார்; கூடலுார் பாண்டியார் 'டான்டீ' பகுதியில் சேதமடைந்த குடிநீர் கிணறு சீரமைக்கும் பணி காரணமாக, தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கூடலுார் பாண்டியார் அரசு தேயிலை கோட்டம் (டான்டீ) சரகம் எண்-1சி தொழிலாளர்களுக்கு, கிணறு அமைத்து குடிநீர் சப்ளை செய்து வருகிறது.
கடந்த ஆண்டு, கிணறு சேதமடைந்தது. அதனை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். கோடையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால், கிணற்றை சீரமைக்க வலியுறுத்தினர்.
அதனை ஏற்று டான்டீ சார்பாக, கடந்த வாரம் கிணறு சீரமைக்கும்பணி துவங்கப்பட்டது. இப்பணியின் காரணமாக, தொழிலாளர்களுக்கு குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டனர். பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக நெல்லியாளம் நகராட்சி லாரியில் குடிநீர் சப்ளை செய்ய வலியுறுத்தினர்.
இந்நிலையில், நெல்லியாளம் நகராட்சி ஊழியர்கள் நேற்று லாரியில் தண்ணீர் எடுத்து வந்து, தொழிலாளர்களுக்கு சப்ளை செய்தனர்.
துணை தலைவர் நாகராஜ் கூறுகையில், ''சேதமடைந்த கிணறு சீரமைப்பு பணி முடியும் வரை, தொழிலாளர்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நகராட்சி சார்பில் தண்ணீர் சப்ளை செய்யப்படும்,'' என்றார்.