/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை; சட்ட பணிகள் ஆணை குழுவிடம் மனு
/
குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை; சட்ட பணிகள் ஆணை குழுவிடம் மனு
குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை; சட்ட பணிகள் ஆணை குழுவிடம் மனு
குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை; சட்ட பணிகள் ஆணை குழுவிடம் மனு
ADDED : அக் 03, 2025 08:56 PM
கோத்தகிரி; 'கோத்தகிரி கேர்பெட்டா கிராம மக்கள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, கோத்தகிரி நீதிமன்ற சட்ட பணிகள் ஆணை குழுவிடம், கிராம பிரமுகர் தேவராஜ் தலைமையில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியுள்ளதாவது:
கோத்தகிரி நகராட்சி, 7வது வார்டுக்கு உட்பட்ட, கேர்பெட்டா கிராமத்தில், 500 குடும்பங்களில் மக்கள் வசிக்கின்றனர்.
இந்த கிராமத்திற்கு நீர் ஆதாரத்தில் இருந்து வரும் தண்ணீர், ஏழு ஆண்டுகளாக வினியோகிக்கப்படுவதில்லை.
கிராமத்திற்காக, 35 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்ட கிணற்று நீர் மாசடைந்து உள்ளது. 'கிணற்றை துார்வாரி, சுகாதாரமான தண்ணீர் வழங்க வேண்டும்,' என, பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை.
'ஜக்கனாரை மற்றும் சக்கத்தா நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, கிராமத்திற்கு இணைப்பு வழங்குவது,' என, வனத்துறை பதிவில் உள்ளது. ஆனால், இணைப்பு வழங்கவில்லை.
கிராமத்தை ஒட்டி, லாங்வுட் சோலை நீர் ஆதாரம் இருந்தும், பயன் இல்லாமல் ஆற்று நீரை பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, இங்குள்ள கிணற்றை துார்வாரி தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.