குடிநீர் வினியோகத்தில் குளறுபடி; சுழற்சி முறையில் பணி வழங்கினால் பயன்
குடிநீர் வினியோகத்தில் குளறுபடி; சுழற்சி முறையில் பணி வழங்கினால் பயன்
ADDED : ஜூலை 22, 2025 09:33 PM
குன்னுார்; 'குடிநீர் வினியோகத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க, உள்ளாட்சிகளில் பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் வழங்குவதில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உரிய முறையில் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் ஒரு சில இடங்களில், குடிநீர் வினியோகம் செய்வதில் முறைகேடுகள் பாதிப்புகள்தொடர்கிறது.
இந்நிலையில், குன்னுார் ஜெகதளா பேரூராட்சி, 7வது வார்டு ஆரோக்கிய புரம் பகுதியில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை.
இது குறித்து அப்பகுதி மக்கள், பஞ்., நிர்வாகத்தில் தெரிவித்துள்ளனர்.
எனினும், தீர்வு கிடைக்காத நிலையில், அப்பகுதியில் மக்கள் ஆய்வு செய்த போது, மெயின் குழாய் இணைப்பில் அடைப்பு ஏற்படுத்தப்பட்டது, தெரியவந்ததால், மாவட்ட கலெக்டருக்கு புகார் அனுப்பி உள்ளனர்.
மக்கள் கூறுகையில், 'பல இடங்களிலும் இது போன்ற குளறுபடிகள் நடக்காமல் இருக்க, பணியாளர்கள், ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பணி வழங்கவும், உள்ளாட்சி அதிகாரிகள் உடனடி தீர்வுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
