/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விலங்கூர் சாலையில் தேங்கும் தண்ணீர்: நாள்தோறும் அவதி
/
விலங்கூர் சாலையில் தேங்கும் தண்ணீர்: நாள்தோறும் அவதி
விலங்கூர் சாலையில் தேங்கும் தண்ணீர்: நாள்தோறும் அவதி
விலங்கூர் சாலையில் தேங்கும் தண்ணீர்: நாள்தோறும் அவதி
ADDED : ஏப் 04, 2025 10:24 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் சாலையில், தண்ணீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் சிரமப்படுகின்றனர்.
பந்தலுார் அருகே நெலாக்கோட்டை விலங்கூர் பகுதியில் அரசு பள்ளி செயல்பட்டு வருவதுடன், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இதனை ஒட்டி பழங்குடியின குடியிருப்புகள் மற்றும் ஐயப்பன் கோவில் செல்லும் சாலை உள்ளது.
இந்த சாலையில் குழிகள் உள்ளன. மழை காலங்களில் இந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாததுடன், மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். வேறு வழியின்றி பெற்றோர் உதவியுடன், மாணவர்கள் சாலையை கடக்கும் போது, நிலை தடுமாறி தண்ணீரில் தவறி விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.
மக்கள் கூறுகையில்,'சாலையில் உள்ள குழிகளை சீரமைக்க வலியுறுத்திய போதும், அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், அடிக்கடி மாணவர்கள் சாலையில் விழும் நிலை ஏற்படுகிது.
இனி வரும் பருவ மழை காலத்தில் சாலை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். அனைவரும் இந்த சாலையை கடப்பதில் பெரும் சிக்கல் ஏற்படும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

