/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வயநாடு செட்டி சமுதாய வெள்ளி விழா நிகழ்ச்சி
/
வயநாடு செட்டி சமுதாய வெள்ளி விழா நிகழ்ச்சி
ADDED : ஜன 16, 2026 06:09 AM

பந்தலுார்: வயநாடன் செட்டி சர்வீஸ் சொசைட்டி, தமிழ்நாடு பிரிவின், 25-ம் ஆண்டு விழா, பந்தலுார் அருகே எருமாடு தனியார் மண்டபத்தில் நடந்தது.
கொடியேற்றத்துடன் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து மாணவி துாபுராவினோத் இறைவணக்கம் பாடினார். துணை தலைவர் விஜயன் வரவேற்றார். தமிழ்நாடு பிரிவு தலைவர் வேணு தலைமை வகித்து பேசுகையில், ''தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் செட்டி சமுதாயம் மக்களுக்கு, பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள் ஒதுக்கீட்டில் இரண்டு சதவீதம் ஒதுக்காத காரணத்தால், அரசு வேலைவாய்ப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இளைய தலைமுறையினர், உயர்கல்வி படித்து வரும் நிலையில், அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,'' என்றார்.
மத்திய குழு தலைவர் ஸ்ரீதரன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், ''சமுதாய மக்கள் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே, அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும்,'' என்றார்.
தமிழ்நாடு பிரிவு செயலாளர் சண்முகம், கடந்த மூன்று ஆண்டுகால அறிக்கை சமர்ப்பித்தார். பொருளாளர் சதீஷ் வரவு, செலவு கணக்கு குறித்து பேசினார். முன்னாள் பொறுப்பாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தமிழ்நாடு பிரிவு துணை செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.

