/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பதால் கோடையை சமாளிக்கலாம்! தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளவும் ஏற்பாடு
/
அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பதால் கோடையை சமாளிக்கலாம்! தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளவும் ஏற்பாடு
அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பதால் கோடையை சமாளிக்கலாம்! தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளவும் ஏற்பாடு
அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பதால் கோடையை சமாளிக்கலாம்! தடையின்றி மின் உற்பத்தி மேற்கொள்ளவும் ஏற்பாடு
ADDED : நவ 07, 2024 11:13 PM

ஊட்டி : நீலகிரி மாவட்ட அணைகளில் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பில் இருப்பதால், கோடையில் தடையின்றி மின் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், குந்தா மற்றும் பைக்காரா நீர் மின் திட்டம் செயல்படுகிறது. இந்த மின் திட்டங்களின் கீழ், 'குந்தா,கெத்தை,பரளி,பில்லுார்,அவலாஞ்சி,காட்டு குப்பை, பைக்காரா, சிங்காரா,' உள்ளிட்ட, 12 மின் நிலையங்கள் செயல்படுகின்றன. 13 அணைகள், 30க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் சேமிக்கப்படும் தண்ணீர் மூலம் மின் உற்பத்தி மேற்கொள்ளப்படுகிறது. இங்குள்ள, 32 மின் உற்பத்தி பிரிவுகளின் கீழ், தினசரி, 833.65 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ள முடியும்.
நீர் ததும்பும் அணைகள்
நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழையை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் அவ்வப்போது பரவலாக பெய்து வருகிறது. குந்தா மற்றும் பைக்கார நீர்மின் திட்டத்தின் கீழ் உள்ள,13 அணைகளில், 90 சதவீதத்திற்கு நீர் ததும்பி காட்சியளிக்கிறது.
மின் உற்பத்திக்கு முக்கிய அணையாக கருதப்படும் அப்பர்பவானி, அவலாஞ்சி,எமரால்டு, பைக்காரா,குந்தா, கெத்தை உள்ளிட்ட அணைகளில் முழு கொள்ளளவில் தண்ணீர் இருப்பில் உள்ளது.
அந்த அணைகளில் இருந்து, 'கிராம ஊராட்சி, பேரூராட்சி,நகராட்சி' என, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. வடகிழக்கு பருவமழை அதிகளவு பெய்யக்கூடும் என்பதால், நீலகிரியில் உள்ள மின் நிலையம் மற்றும் அணைகளில் மின்வாரிய சார்பில், சமீபத்தில் பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினசரி 600 மெகாவாட் உற்பத்தி
தற்போது, அணைகளில் தேவைக்கேற்ப நீர் இருப்பில் உள்ளது. பராமரிப்பு பணிகளும் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தினசரி, 600 மெகாவாட் வரை மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் கோவை,ஈரோடு, மதுரை, சென்னை உள்ளிட்ட மின் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு. பல்வேறு பகுதிகளுக்கும் தடையின்றி வினியோகிக்கப்பட்டு வருகிறது.
மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மாநில அளவில் நீலகிரியில் தான் நீர்மின் உற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை கை கொடுத்ததால் அணைகளில், 90 சதவீத அளவுக்கு தண்ணீர் இருப்பில் உள்ளது. தேவைக்கேற்ப உற்பத்தியும் நடந்து வருகிறது. கோடையில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடையின்றி சமாளிக்க முடியும்,' என்றனர்.