/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'பிளாஸ்டிக் தடைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம்': வியாபாரிகளை அச்சுறுத்தினால் போராட்டம் நடத்துவோம்

ADDED : பிப் 14, 2024 11:53 PM

ஊட்டி : ஊட்டியில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நீலகிரி மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு பின், மாவட்ட தலைவர் முகமது பரூக் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு தடை செய்த, 21 'பிளாஸ்டிக்' ரகங்களை நாங்களும் விற்பனை செய்வதில்லை. மாவட்டத்தின் சுற்றுச் சூழலை கருத்தில் கொண்டு, அரசு தடை செய்யப்பட்ட பொருட்களை வியாபாரிகள் பயன்படுத்த கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். அதேபோல, 'பிளாஸ்டிக்' தண்ணீர் பாட்டில்களையும் விற்பனை செய்வதில்லை.
இந்நிலையில், ஒரு சில அதிகாரிகள் அரசால் அனுமதிக்கப்பட்ட, மறு சுழற்சிக்கு உகந்த பேக்கிங் 'பிளாஸ்டிக்' பொருட்களை பயன்படுத்தினாலும் அபராதம் விதித்து வருகின்றனர். கடைகளுக்கு 'சீல்' வைக்கின்றனர். இது வியாபாரிகள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.
அதிகாரிகளின் இந்த செயல் குறித்து, மாவட்ட நிர்வாத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை எனில், விரைவில் மாநில நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்து, மாவட்டம் தழுவிய தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும்.
மேலும், ஊட்டி நகராட்சி கடைகளை பொறுத்தவரை நகராட்சி நிர்வாகம் முதலில் கூறிய உறுதி மொழியை போன்று, வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு மாநில துணை தலைவர் தாமஸ், மாநில இணை செயலாளர்கள் அப்துல் ரசாக், ராஜமுகமது, சங்க மாவட்ட செயலாளர் குணசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.