/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்டத்தில் களை எடுக்கும் பணி; களத்தில் தோட்ட தொழிலாளர்கள்
/
தோட்டத்தில் களை எடுக்கும் பணி; களத்தில் தோட்ட தொழிலாளர்கள்
தோட்டத்தில் களை எடுக்கும் பணி; களத்தில் தோட்ட தொழிலாளர்கள்
தோட்டத்தில் களை எடுக்கும் பணி; களத்தில் தோட்ட தொழிலாளர்கள்
ADDED : ஆக 08, 2025 08:26 PM

கோத்தகிரி; கோத்தகிரி பகுதியில் பூண்டு தோட்டங்களில் களை எடுக்கும் பணியில், விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில், தேயிலைக்கு அடுத்த படியாக, மழை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு போகத்தில், அதிக பரப்பளவில் பூண்டு பயிரிட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, கோத்தகிரி கட்டபெட்டு, ஆடத்தொரை, கூக்கல்தொரை மற்றும் கதகுதொரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அதிக பரப்பளவில் வெள்ளைப் பூண்டு பயிரிடப்பட்டுள்ளது.
நீலகிரியில் விளையும் பூண்டுக்கு, மணம், குணம் மற்றும் சுவை நிறைந்துள்ளதால், வெளி மாநில மற்றும் சமவெளி பகுதிகளில், அதிக மவுசு உள்ளது. இதனால், கூடுதல் விலைக்கு பூண்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ பூண்டுக்கு, தரத்திற்கு ஏற்ப, 400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. 'எதிர்வரும் நாட்களில், விலை அதிகரிக்கும்,' என, விவசாயிகள் நம்பியுள்ளனர்.
இதனால், செழித்து வளர்ந்துள்ள பூண்டு தோட்டத்தில், கூடுதல் தொழிலாளர்களை பணியமர்த்தி, களையெடுத்து உரமிடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.