/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ. 4.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ. 4.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 09, 2024 09:36 PM
ஊட்டி; சென்னையில் மாநில முதல்வர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, துாய்மை பணியாளர்களை கவுரவித்தார்.
இதனை தொடர்ந்து, ஊட்டியில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் தலைமை வகித்து, 549 பயனாளிகளுக்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண்மை துறை, கூட்டுறவு துறை மற்றும் தோட்டக்கலைத்துறை உட்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில், 4 கோடியே, 87 லட்சத்து, 71 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
தொடர்ந்து, ஊட்டி, குன்னுார், கூடலுார், மற்றும் நெல்லியாளம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும், 456 துாய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.