/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குடியரசு தின நிகழ்ச்சியில் ரூ.60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்! சிறப்பாக பணிபுரிந்த 159 பேருக்கு பதக்கம்
/
குடியரசு தின நிகழ்ச்சியில் ரூ.60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்! சிறப்பாக பணிபுரிந்த 159 பேருக்கு பதக்கம்
குடியரசு தின நிகழ்ச்சியில் ரூ.60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்! சிறப்பாக பணிபுரிந்த 159 பேருக்கு பதக்கம்
குடியரசு தின நிகழ்ச்சியில் ரூ.60 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்! சிறப்பாக பணிபுரிந்த 159 பேருக்கு பதக்கம்
ADDED : ஜன 26, 2025 11:45 PM

ஊட்டி: ஊட்டியில் நடந்த, 76வது குடியரசு தின விழா நிகழ்ச்சியில், 26 பயனாளிகளுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய, 159 பேருக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன.
ஊட்டி அரசு கலைக்கல்லுாரி விளையாட்டு மைதானத்தில், 76வது குடியரசு தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் லட்சுமி பவ்யா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்.
அதில், ஆயுதப்படை போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு வீரர்கள், தேசிய மாணவர் படையினர், இந்திய செஞ்சிலுவை சங்கத்தினர், சாரணர் படையினர் ஆகியோர் பேண்டு வாத்தியம் முழங்க வரிசையாக வந்து அணி வகுப்பு மரியாதை செலுத்தினர்.
பதக்கம், சான்றிதழ்
தொடர்ந்து,முதல்வரின் காவலர் பதக்கம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, வனத்துறை, வருவாய்த்துறை, மருத்துவத்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, மாவட்ட கருவூல கணக்கு துறை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், போக்குவரத்து துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த, 159 பேருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
நலத்திட்ட உதவி
நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம், முன்னோடி வங்கி, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட குழந்தைகள் நலத்துறை, தோட்டக்கலை துறை, வருவாய் மற்றும் பேரிடம் மேலாண்மை துறை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. முன்னதாக மேடையில் கலெக்டர் லட்சுமி பவ்யா, எஸ்.பி., நிஷா ஆகியோர், அமைதியின் அடையாளமாக, 5 சமாதான வெள்ளை புறாக்களை பறக்கவிட்டனர்.
தொடர்ந்து, தோடர், கோத்தர், படுகரின மக்களின் பாரம்பரிய நடனம் மற்றும் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாவட்ட எஸ்.பி.,நிஷா, மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், ஆர்.டி.ஓ., சதீஷ்குமார் உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.