முன்னாள் படை வீரர்களின் நலனுக்கு தனி மையம் வெலிங்டன் கமாண்டன்ட் உறுதி
முன்னாள் படை வீரர்களின் நலனுக்கு தனி மையம் வெலிங்டன் கமாண்டன்ட் உறுதி
ADDED : ஜன 12, 2026 06:57 AM

குன்னூர்: 'வெலிங்டனில் முன்னாள் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் நலனுக்காக, எம்.ஆர்.சி ,யில் தனி உதவி மையம் ஏற்படுத்தப்படும். என, மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் கமாண்டன்ட் கிருஷ்ணனேந்து தாஸ் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் சார்பில், கிளிமஞ்சாரோ அரங்கில், நேற்று முன்தினம், முன்னாள் படைவீரர்கள் தின சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், கமாண்டன்ட் பிரிகேடியர் கிருஷ்ணனேந்து தாஸ் பேசுகையில்,''முன்னாள் படை வீரர்களுக்கான சுகாதாரத் திட்டத்தின் கீழ், பாலி கிளினிக் வாயிலாக, முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருந்துகள் அனைத்தும் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் குடும்பத்தினர் நலனுக்காக, எம்.ஆர்.சி ,யில் தனி உதவி மையம் ஏற்படுத்தப்படும். இது போன்ற முகாம்களில் பயன் பெற்று வரும் நிலையில், இந்த மையத்தின் வாயிலாக, எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தங்களது, ஆவணங்கள் பிரச்னை உட்பட அனைத்து வித நல உதவிகளையும் பெற பயனுள்ளதாக அமையும்,'' என்றார்.
கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை டாக்டர்கள், பரிசோதனை மேற்கொண்டனர்.
முகாமில் பள்ளி மாணவியரின் படுக நடனம் மற்றும் பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
