ADDED : மார் 17, 2026 02:15 PM

குன்னூர்: குன்னுார் வெலிங்டனில் எம்.ஆர்.சி., சார்பில் நடந்த மராத்தான் போட்டியில், 1200 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
குன்னுார் வெலிங்டன் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் (எம்.ஆர்.சி.,) சார்பில், மராத்தான் போட்டி நடந்தது. வலுவான உடல், வலிமையான மனம் மற்றும் வலிமையான தேசம் என்பதை வலியுறுத்தி ஒன்றாக ஓடுவோம் என்ற கருப்பொருளில் போட்டி நடந்தது. அதில், 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்தி ஓடினர். பங்கேற்ற அனைவருக்கும் மெடல்கள் வழங்கப்பட்டன.
போட்டியை துவக்கி வைத்ததுடன், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு எம்.ஆர்.சி., கமாண்டனட் கிருஷ்ணனேந்து தாஸ், ராணுவ மகளிர் நல சங்க தலைவர் தனுஸ்ரீ கிருஷ்ணனேந்து தாஸ் ஆகியோர் கேடயங்களை வழங்கினர். ஜூம்பா நடனம், எம்.ஆர்.சி., ராணுவ பேண்ட் இசை அனைவரையும் மெதுவாக கவர்ந்தது.
