/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் என்னென்ன? குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
/
விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் என்னென்ன? குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் என்னென்ன? குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள் என்னென்ன? குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி
ADDED : ஜன 20, 2024 02:13 AM

ஊட்டி:ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அருணா தலைமை வகித்தார்.
கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது:
தோட்டக்கலை துறை சார்பில் அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு, என்னென்ன சலுகைகள் வழங்கப்படுகிறது என்பதை தெரிவிக்க வேண்டும். கோத்தகிரி வட்டம் கடினமாலா கிராமம் கொத்திமுக்கு பகுதியில் மலர் விவசாயம் செய்ய வேலை அமைத்து வருகிறோம். மலர் விவசாயம் செய்ய நிலத்தை பன்படுத்த அதில் உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட கடந்த செப்., மாதம் விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை.
மலர் விவசாயம் செய்ய காட்டு செடிகளை விரைந்து அகற்ற குப்பட்டா எந்திரம் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளாகிய நாங்கள் தோட்டப்பணிகளுக்கு 'வெல்டிங் மற்றும் கட்டிங்' செய்ய தினமும், 350 ரூபாய் மற்றும் மாதம் மின் கட்டணம் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டியுள்ளது. விவசாயிகளுக்கு இந்த கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.
தோட்டக்கலை துறை மூலம் தொடங்கப்பட்ட எஸ்.பி.ஜி., சங்கங்களின் கூட்டத்தில் கூடலுார் பகுதியில் இதுவரை அதிகாரிகள் கலந்து கொள்வதில்லை. இந்தாண்டு பருவம் தவறிய மழையால் சுண்டவயல் பகுதியில் நெல் விவசாயத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு பாடந்துறை பகுதியில் பாகற்காய் விவசாய பாதிப்புக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கு தோட்டக்கலையில் புதிய திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.
இதேபோல், கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு துறை சார்பில் உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி பேசுகையில், '' தோட்டக்கலை துறை 'அட்மா' திட்டத்தின் கீழ் ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் ஆகிய வட்டாரங்களில், 8 லட்சம் ரூபாய் செலவில் பயிற்சி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், 3 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விவசாய பயன்பாட்டுக்கு சிறிய கனரக இயந்திரம் பயன்படுத்த தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் ஆய்வு மேற்கொண்டு அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.
கொத்திமுக்கு பகுதி இடத்தை கள ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வனச்சரக அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.